குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்-காவ்டா தேசிய நெடுஞ்சாலையில், சனிக்கிழமை (21) நள்ளிரவில் நிகழ்ந்த துயரமான வீதி விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் பயணம் செய்த கார், வேகமாகக் வந்த டிரெய்லர் லொரி ஒன்றின் மீது மோதியதால் இந்த விபத்து நேரிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் சனிக்கிழமை இரவு 10 மணியளவில், கட்ச் ரான் (Rann of Kutch) பகுதிக்குச் சென்றுவிட்டு புஜ் (Bhuj) நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக, கட்ச் மேற்கு காவல் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் இரு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் மூன்று சிறு குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் காவ் டாவிலிருந்து (Khavda) காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டிரெய்லர் லொறி ஒன்று அந்தக் காரின் மீது மோதியது.
