Main Menu

பாவனையில் இருக்கும் 182.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள்

மேலும் பல போலி சுகாதார அனுமதி அட்டைகளின் (pass sanitaire) பாவனையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 110.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அது 182.000 எனும் எண்ணிக்கையை கடந்துள்ளது. தொடர்ச்சியாக காவல்துறையினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

தற்போது மொத்தமாக 400 வழக்குகள் விசாரணையில் உள்ளது. ஆனால் மேலும் பல வழக்குகள் தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 200 யூரோக்கள் கட்டணமாக பெற்றுக்கொண்டு வழங்கப்படும் இந்த போலி சுகாதார அட்டைகளினால் பெரும் உயிர் ஆபத்து உள்ளது என சுகாதார அமைச்சர் கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார்.

இந்த ஒருவார கால விசாரணைகளில் இது கண்டறியப்பட்டுள்ளதால், மேலும் பல வழக்குகள் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின் படி தற்போது 182.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...