Main Menu

பாஜக வெற்றியில் மிகப் பெரிய சதி… பானர்ஜி!

கடந்த தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்று பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாறாக கடந்தத் தேர்தலில் 34 தொகுதிகளில் வென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இந்த முறை 22 தொகுதிகளில் வென்று சரிவை சந்தித்துள்ளது.

பாஜகவின் வெற்றியின் பின்னணியில் சதி இருப்பதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றன. மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த இடதுசாரிகளுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்று பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மாறாக கடந்தத் தேர்தலில் 34 தொகுதிகளில் வென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இந்த முறை 22 தொகுதிகளில் வென்று சரிவை சந்தித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பாஜகவின் இந்த வளர்ச்சி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அக்கட்சியின் உயர் மட்டக் குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி முன்வந்தார். ஆனால், அதை நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததின் பின்னணியில் சதி இருக்கலாம். என்னிடம் இதற்கான ஆதாரம் இல்லை. ராஜஸ்தான், குஜராத் உள்பட பல மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக பெற்றிருப்பதில் நிச்சயம் சதி இருக்க வேண்டும். இதைச் சொல்வதற்கு மக்களுக்கு பயம் இருக்கலாம். ஆனால், நான் பயப்பட மாட்டேன்” என்று பேசினார்.
2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள நிலையில், பாஜக வளர்ச்சியைத் தடுக்கும் உத்திகள் குறித்து ஆராயவும், இந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதை களையவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

பகிரவும்...