Main Menu

பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்

இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை தமது சுதந்திர தினத்தை காஷ்மீருக்கான ஒருமைப்பாட்டு தினமாகக் கருதத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கும் பாக்கிஸ்தான், உலக அரங்கில் எப்போதும் இலங்கைக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதுடன், குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்திருக்கிறது,

பாக்கிஸ்தானின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷஹீட் அஹ்மட் பாக்கிஸ்தான் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அத்தோடு பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின செய்திகள் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலரும், இலங்கைவாழ் பாகிஸ்தானிய பிரஜைகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பகிரவும்...