Main Menu

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை காட்டுவதற்கு காரணம் என்ன என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வடக்கிற்கான மூன்று நாட்கள் திடீர் பயணம் பல்வேறு திரைமறைவு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்றும் சிவசக்தி ஆனந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தை மையப்படுத்தி இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் முனைகின்றாரா என்றும் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்பவராக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இருந்திருந்தால் அந்த மக்களுக்காக ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை பாரியளவில் வழங்கி கண்மூடித்தனமான அப்பட்டமான மனித உரிமைகளை மீறிய போருக்கு பாகிஸ்தான் காரணமாக இருந்திருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்த பின்னர் வடக்கு மக்கள் மீது கரிசனை கொள்வது வேடிக்கையான விடயம் என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...