Main Menu

பாகிஸ்தானில் கோர விபத்து – 26 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடக்கு சிலாஸ் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...