Main Menu

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக தீவிர போராட்டம் – சாலைகளை முற்றுகையிட எதிர்க் கட்சிகள் முடிவு

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடுகள் மூலம் இம்ரான்கான் வெற்றி பெற்றதாக ஜாமியக் உவேமா-இ-இஸ்மால் பசல் (ஜே.டி.ஐ.எப்.) கட்சி குற்றம் சாட்டியது.

எனவே இம்ரான்கான் உடனே பதவி விலக வேண்டும். மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 27-ந்தேதி சிந்து மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் வரை பேரணி நடந்தது. கடந்த 1-ந்தேதி இந்த பேரணி நடந்தது. இந்த பேரணி இஸ்லாமாபாத்தை அடைந்ததும் பிரமாண்ட பொதுக்கூட்டமும், தொடர் போராட்டங்களும் நடைபெற்றது.

விடுதலை பேரணி என்ற பெயரில் அந்த கட்சி நடத்திய போராட்டம் கடந்த 2 வாரங்களாக நீடித்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. எனினும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக நேற்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அடுத்தகட்டமாக ‘பிளான் பி’ என்ற பெயரில் நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்பு படம்

இதுகுறித்து ஜாமியத்-ஏ- இஸ்லாம் பகலின் தலைவர் பஸ்லூர் ரகுமான் கூறுகையில், நமது வலிமை இங்கே ஒன்றிணைந்துள்ளது. நமது கட்சியினர் வெளி இடங்களிலும் உள்ளனர்.

இந்த போராட்டம் அரசின் அடித்தளத்தை பாதித்துள்ளது. அடுத்த கட்டமாக நமது போராட்டம் அரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...