Main Menu

பாகிஸ்தானில் இன்று பயங்கர நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சாலை சேதமடைந்திருக்கும் காட்சிஇஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
ரிக்டர் அளவு கோளில் 5.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா பகுதியை தாக்கியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அந்நாட்டின் வடக்கு பகுதிகளான பெஷாவர், மர்டன், மலகண்ட் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைய நிலநடுக்கத்தால் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட இதே அளவிலான நிலநடுக்கத்தில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...