Main Menu

பறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா!

தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் ஆங்கில கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்துள்ளார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஸபாடா (Franky Zapata) . அதி நவீன விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி உள்ளது.

அவர் சிறிய ரக ஜெட் இயந்திரங்களைக் கொண்டு பறக்கும் தட்டுகளை உருவாக்கி மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்தார்.

அதற்கான தொழிநுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், திரவ எரிபொருள் நிரப்பப்பட்ட பையை சுமந்துகொண்டு பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் அதாவது 35.4 கி.மீற்றர்கள் வரை பறந்துள்ளார்.

முன்னதாக அவர் கடந்த ஜூலை மாதம் தனது கன்னி முயற்சியை மேற்கொண்ட போதும் அது முழுமையாக சாத்தியமடையவில்லை. இடைநடுவில் சில தொழிநுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.

இருந்த போதும் தற்போது இரண்டாவது முயற்சியில் அவர் தனது கனவை நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் வான்படையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் மத்தியில் ப்ரான்கி ஸபாடா தனது பறக்கும் முயற்சியை தொடர்ந்தார்.

மூன்று உலங்கு வானூர்திகள் வழிகாட்ட அவர், பிரான்சின் சங்கேட் என்ற இடத்தில் இருந்து ஆங்கில கால்வாயின் மறுமுனை வரை பறந்து சென்று மீண்டும் திரும்பியுள்ளார். இவரது சாதனை விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு படிக்கல்லாக கருதப்படுகின்றது.

பகிரவும்...