Main Menu

தடைப்பட்ட Facebook, Instagram சேவைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளன!

உலகளவில் தடைப்பட்டிருந்த Facebook, Instagram சமூக வலைத்தளங்களின் சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களின் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணிக்குப் பின்னர் பயனாளர்கள் வழக்கம்போல் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் சேவைகள் தடைபட்டதாக Down Detector கண்காணிப்பு இணையத்தளம் தெரிவித்திருந்தது.

Instagram ஐப் பயன்படுத்த முடியவில்லை என்றும் Facebook இல் படங்கள், காணொளிகள் பகிர்வதில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சில பயனாளர்கள் தெரிவித்திருந்தனர்.

பகிரவும்...