Main Menu

பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!

பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றி நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.

அங்கு பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து, கூரான கத்தி மூலம் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்தார்.

அதன் பின்னர் அந்த நபரை பொலிஸார் சுட்டுக்கொண்டனர். தாக்குதல் நடத்திய அதிகாரி மிக அமைதியான சுபாவம் கொண்டவர் எனவும் அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணமே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Le parquet national antiterroriste) இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெறுவதற்கு 18 மாதங்களுக்கு முன்னர் இவர் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டது இதற்கு ஓர் அடிப்படை காரணமாகக் கருதப்படுகின்றது.

அத்தோடு சமீபத்திய நாட்களில் அவர் விரக்தியில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Mickaël H.  எனும் குறித்த 45 வயதுடைய அதிகாரி, தாக்குதல் நடத்திய அன்றைய தினத்திலேயே தாக்குதலுக்கான சமையலறைக் கத்தியையும் வாங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...