Main Menu

பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்- நிபுணர்கள் குழு

கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான பரிசோதனைகள் அவசியமாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகள் முன்வைத்த நிபுணர் குழுவின் உறுப்பினரான கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவ பீட மனித மரபியல் தொடர்பான பேராசியர் வஜிர திஸாநாயக்கவிடம் எமது செய்தி பிரிவு தொடர்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு முன்னர் நாளொன்றுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை இரண்டாயிரமாக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமது தரப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார தரப்பினருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வைரஸை கண்டறிவதற்கு நடாத்தப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனத்தில் தற்போது அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

அங்கு நாளொன்றுக்கு 200 பரிசோதனைகள் வரை முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது.

பகிரவும்...