Main Menu

பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது – ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது என்றும் அது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படலாம் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை மக்களும் தெரிவித்து வரும் நிலையில் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைய மாற்றப்படும் என 2017 இல் அரசாங்கம் உறுதியளித்தாலும் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்றும் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகையின் முக்கியத்துவத்தையும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...