Main Menu

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க

மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை ஒடுக்குவதற்காக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முனைகின்றது.

ஆகையால் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தோற்கடிப்போம்” என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்...