Main Menu

அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!

அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளரை நியமித்தல் ஆகிய பொறுப்புகள் அரசியல் அமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பதவிகளுக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

தற்போதைய கணக்காய்வாளர் காமினி விஜேசிங்கவின் பதவிகாலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதேபோல், பிரதமர நீதியரசர் நளின் பெரேராவின் பதவிகாலம் எதிர்வரும் 29 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையிலேயே, இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் ஆகிய நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அரசியல் அமைப்பு சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ குறித்த குழுவில் இருந்து விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.

பகிரவும்...