Main Menu

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு: இந்தியா

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அண்மையில் வழங்கிய செவ்வியில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசாங்கம் மீண்டும் வழங்காதவரை அந்நாட்டுடனான பேச்சுவர்த்தை சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இயல்பான நல்லுறவைப் பேணவே இந்தியா எப்போதும் விரும்புவதாகவும் அதற்கு பயங்கரவாதமற்ற வன்முறையற்ற சூழல் நிலவ வேண்டியது கட்டாயம் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலளித்துள்ளார்.

பகிரவும்...