Main Menu

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு

நீர்கொழும்பு சிறையில் அண்மையில் நடந்த மோதலைத் தொடர்ந்து காணாமல் போன துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விரிவான தேடுதலுக்குப் பின்னர் சிறை வளாகத்திற்குள் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது.

ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலையில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் காணாமல் போயிருந்தது.

இதற்கிடையில், கண்டியில் உள்ள பழைய போகம்பர சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடமளிக்க வரும் நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைகள் அமைப்பில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் ஒரு புதிய சிறையை நிறுவுவதற்காக ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.