Main Menu

“நீதி நிலை நாட்டப்பட வேண்டும் இல்லையேல் இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும்”!

முல்லைத்தீவு நீராவியடியில் இடமபெற்ற சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இல்லையேல் அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், “முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் முன்பு நீதிமன்றக் கட்டளையை கால்களால் மிதித்து சில பௌத்த பிக்குகளும் அவர்களின் தோழர்களும் நிகழ்த்திய அட்டகாசமான சட்டமீறல்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம். இல்லையேல், நீதி நிலைநாட்டப்படும் வரையில் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றினை இந்த நாடு சந்திக்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...