Main Menu

நீதிக்கான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவான தீர்மானத்தை முன்வைக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டைப் பின்பற்றுமாறும் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் மோசமான அறிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான நீதிக்கான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும் என்றும் அச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

போர் நிறைவடைந்து சுமார் 12 வருடங்கள் ஆகியும், மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர்காலத்தில் அதிகரிக்கூடிய ஆபத்து பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதில் இலங்கையின் மோசமான நிலையையும் நாட்டில் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் விளைவையும் காட்டுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை குறித்து இன்னும் கடுமையான மேற்பார்வை செய்ய அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பகிரவும்...