Main Menu

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தடையாக இருக்கும் பன்முக சவால்கள்

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார்

தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிலான அதன் பாதகமான விளைவுகளின் காரணமாக அதிகரித்த உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில், அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கு போதிய நிதியுதவியை வழங்குவதற்காக 77வது குழுவிற்கு அழைப்பு விடுப்பதற்கான முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார்.

கயானா கூட்டுறவுக் குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சரின் தலைமையில் 77வது குழுவின் வெளிவிவகார அமைச்சர்களின் நாற்பத்தி நான்காவது வருடாந்தக் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 12) மெய்நிகர் இணைய வழியில் நடைபெற்றது. இந்த ஊடாடும் உரையாடலானது, ´முக்கிய முன்னுரிமைப் பிரச்சினைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய பிரதிபலிப்பு மற்றும் 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது ஏற்படுத்தும் தடைகள்´ என்ற தலைப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிய வலுவான ஆணையானது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவரது செழிப்பான நோக்கிற்காக, ஜி-77 இன் இலக்குகள் தொடர்பில் இலங்கையை மேலும் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றது என ஒரு வீடியோ அறிக்கையில் அமைச்சர் குணவர்தன எடுத்துரைத்தார். இலங்கையின் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு ஆகியவற்றினூடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலான இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...