Main Menu

நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை கூட்டமைப்பு புறக்கணிக்க உள்ளது!

2020ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு  சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குறித்த  சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக  உரையாற்றிய  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்தச் சட்டமூலம், “விசித்திரமானது” என்றும் இலங்கையில் பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளை, இது மூடிமறைக்கும் செயலாக அமைந்துள்ளது.

நாட்டின் நிதிகளை நிர்வகிப்பதற்கும் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியைப் பெறுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிப்பதற்காகவும், இந்தச் சட்டமூலம், ஒரு நிதியாண்டுக்கு முன்னர் விவாதிக்கப்படல் வேண்டும்.

2020 நிதியாண்டில், எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அங்கிகரிக்கப்பட்டவையும் சில தீர்மானங்கள் மாத்திரமே  இத்தகையைத் தீர்மானங்கள், பொது சேவைகளுக்கு மாத்திரமே நிதி வரைவுக்கான ஒப்புதலை வழங்குகின்றது வளர்ச்சி நோக்கங்களுக்காக அல்ல .

இந்நிலையில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு, இந்த அரசாங்கம் அரசமைப்பை மீறியுள்ளது என்றும் 2020ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு, அரசாங்கம் ஒப்புதல் அளிக்க முயல்கின்றது.

இதனால், இந்த நிதிசட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, த.தே.கூ, கலந்துகொள்ளாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...