யேமனில் 2.81 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு
யேமனில் 2 இலட்சத்து 81 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து ஏமனில் இடம்பெறும் சண்டையே இந்த இடம்பெயர்வுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
