Main Menu

நாடு முழுவதும் 32,000 பேர் ஆர்ப்பாட்டம்! – பரிசில் 97 பேர் கைது

நேற்று சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“CONVI DE LA LIBERTÉ” எனும் புதிய வடிவத்திலான ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகர் பரிசில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை நாட்டின் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வாகனங்களில் மிக மெதுவாக பயணித்து, வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முடிவில், தலைநகர் பரிசில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 81 பேர் தொடர்ந்தும் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாளில் மொத்தமாக 513 பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சர் Gerald Darmanin உறுதி செய்துள்ளார்.

தலைநகரில் 7,600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாடு முழுவதும் 32,100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பகிரவும்...