Main Menu

தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்ல புதிய பயணச்சிட்டை அறிமுகம்

தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு புதிய வசதிகளுடன் கூடிய பயணச்சிட்டை ஒன்றை தொடருந்து நிறுவனமான SNCF அறிமுகம் செய்துள்ளது.

€7 யூரோக்கள் கட்டணம் கொண்ட இந்த பயணச்சீட்டுக்களை பயன்படுத்தி உங்கள் வளர்ப்பு பிராணிகளை தொடருந்தில் அழைத்துச் செல்லலாம். TGV Inoui, Intercités, TER போன்ற தொடருந்துகளில் இந்த பயணச்சீட்டை பயன்படுத்த முடியும்.

அதேவேளை, இந்த பயணச்சிட்டைகளை இணையத்தளமூடாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும் முடியும். முன்னதாக இருந்த சில நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொடருந்து நிலையங்களுக்குச் சென்று வளர்ப்பு பிராணிகளின் எடையினை நிறுத்து அதற்கு ஏற்றால் போல் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பார்வையற்ற வளர்ப்பு பிராணிகளை தொடருந்தில் அழைத்துச் செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை. முன்னர் இருந்த இந்த வசதி தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.  

பகிரவும்...