Main Menu

மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் விளைவித்த சேதங்களுக்கு 584000 யூரோக்கள் இழப்பீடு

மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்கள் «gilets jaunes» நெடுஞ்சாலையில் விளைவித்த சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த நீதிமன்றம் பணித்துள்ளது.

கடந்த நவம்பர் 2018 தொடக்கம் ஜூன் 2019 ஆம் ஆண்டுவரை மஞ்சள் மேலங்கி போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பலத்த வன்முறையிலும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நெடுஞ்சாலைகளை முடக்கி, கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கி பலத்த வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இரு நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்ட்ட ஈடு செலுத்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Société des autoroutes de Paris-Normandie (SAPN) மற்றும் Sanef (Société des Autoroutes du Nord et de l’Est de la France) ஆகிய நிறுவனங்களுக்கு, €584,000 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டம் குறித்த ஒரு அமைப்பினாலோ, நிறுவனத்தினாலோ மேற்கொள்ளப்பட்டதல்ல. ஆர்ப்பாட்டத்துக்கு உரிமை கோர அமைப்பு ஒன்று இல்லாததாலும் – அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்ததாலும், , அரசே இந்த தொகையை செலுத்த நேரலாம் என அறிய முடிகிறது.  

பகிரவும்...