Main Menu

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு விஜயபாஸ்கர் கோரிக்கை!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணியினை ஆய்வு செய்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “வெளி மாநிலங்களில் இருந்து சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் வரும் ரயில் பயணிகளை ரயில்வே துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கப்படுகிறது.

பாடசாலை,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பூங்கா,  சுற்றுலாத் தலங்கள்,  வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும்.

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொது மக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகம் பயணம் செய்வதால் பேருந்துகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...