Main Menu

திவாலப்பிட்டிய கொரோனா எதிரொலி – 400 பேருக்கு PCR சோதனை

கம்பஹா, திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 400 பேருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திவுலபிடிய பகுதியை சேர்ந்த பெண்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...