Main Menu

தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்

இன்று காலை Annecy நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது முழுமையான கோழைத்தனத்தில் வெளிப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

”தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்களும் பெரியோரும் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் என்னுடைய முழு சிந்தனைகளும் உள்ளது. மருத்துவக்குழுவினர் முழு வீச்சுடன் இயங்கி வருகின்றனர்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமர் Elisabeth Borne மற்றும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோர் சம்பவ இடத்துக்கு இன்னும் சில நிமிடங்களில் சென்றடைவார்கள் என அறிய முடிகிறது.

இன்று காலை Annecy (Haute-Savoie) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஆயுததாரி ஒருவன் மேற்கொண்ட கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.

சிரியா நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளான். 

பகிரவும்...