Main Menu

தயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசின் வசம்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 20-ம் தேதி எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். இதுகுறித்து தெரிவித்த அவர்கள், ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என்று புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்...