Main Menu

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு – ஜனாதிபதி வாக்குறுதி

தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு,  அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடரை இன்று ஆரம்பித்துவைத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.  ” தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க  வேண்டியமை அத்தியாவசியமான காரணி ஒன்றாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்கக வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன.  வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில்வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துக்கு அவர்களது ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதேவேளை ,  உலகில் எல்லா நாடுகளும் இலங்கையின் நட்பு நாடுகள்தான். எமக்கு எதிரிகள் கிடையாது. எந்தவொரு அணியையும் நாம் சார்ந்து இருக்கவில்லை. எல்லா நாடுகளுடனும் நல்லுறவை பேணும் வகையிலான வெளிவிவகாரக் கொள்கை முன்னெடுக்கப்படும். அறவழி போராட்டக்காரர்களை நான் வேட்டையாடுவதாக விமர்சிக்கின்றனர். அறவழி போராட்டக்காரர்களை நான் வேட்டையாடவில்லை. அவர்களை பாதுகாப்பேன். சட்டத்தை கையில் எடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். எனவே, சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பகிரவும்...