Main Menu

குரங்கு அம்மைத் தொற்று – அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக இல்-து-பிரான்ஸ்

பிரான்சில் குரங்கம்மைத் தொற்று இரண்டாயிரத்தைக் கடந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுவரை 2,239 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 845 பேர் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவர்களாவர். பிரான்சில் உறுதி செய்யப்பட்ட குரங்கு அம்மைத் தொற்றாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாவர். அதிக தொற்றுக்கள் உடலுறவு மூலம் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குரங்கு அம்மைத் தொற்றுக்குரிய தடுப்பூசி போடும் பணியும் மிக துரிதமாக இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2 ஆம் திகதி வரையான நிலவரம் படி, பிரான்சில் 37,005 பேருக்கு குரங்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.  

பகிரவும்...