Main Menu

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நானே உருவாக்கினேன் – கருணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நானே உருவாக்கினேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நானே உருவாக்கினேன். சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னிடம் வந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தினை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் யுத்தத்தின் பிரதிபலிப்புகளான இழப்புகள், தாக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை நான் விடுதலைப் புலிகளின் தலைவரிடம் சென்று கூறினேன். இதன்மூலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இரா.சம்பந்தன் தலைவராக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

இதன்போது அண்மையில் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்ட அவரது கருத்து தொடர்பாக விளக்கமளித்த அவர், தான் ஓர் பொதுப்பிரச்சனை பற்றி பேசியதாகவும் சஜித் பிரேமதாசவே அதனை பெரிதுபடுத்தியதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...