Main Menu

தமிழக தேர்தல் களம் ; அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு!

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகவுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று  இரவு நடைபெற்றது. இதனையடுத்தே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக பாஜக 20 இடங்களிலும் பாமக 23 இடங்களிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.  இதுபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

பகிரவும்...