Main Menu

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன் (திங்கட்கிழமை) முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய முடக்கத்தை ஜூன் 28ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முடக்கத்தை நிடிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

  • மாவட்டங்களுக்குள் 50 சதவீத பயணிகளுடன் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி
  • வழிகாட்டு நெறிமுறைகளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பேருந்துகளை இயக்க அனுமதி
  • காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மாலை 7 மணி வரை செயற்பட அனுமதி
  • கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி
  • நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி
  • திருமண நிகழ்வுகளுக்கு, 27 மாவட்டங்களில், மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி
  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயற்பட அனுமதி
  • ஏனைய அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயற்பட அனுமதி
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகளுக்கு அனுமதி
  • 4 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு அனுமதி
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்
  • திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேர் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதி
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
  • படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி
பகிரவும்...