Main Menu

தமிழகத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி

தமிழகத்தில் திறந்தவெளியின் அளவுக்கேற்ப அரசியல் உள்ளிட்ட கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 19ம் திகதி முதல் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அனுமதியளிக்கபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத பங்கேற்பாளர்களுடன் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் பொலிஸ் ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...