Main Menu

தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது – சம்பந்தன்

எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் தனிநபர் இலாபமடையும் விதத்திலான அரசியல் கலப்பு இருக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு என்றுமே நாம் ஆதரவு வழங்குவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணி நாளை(திங்கட்கிழமை) யாழில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் புனிதமானவை என்றும் அவர்கள் நியாயமான கோரிக்கையை வைத்து எழுச்சியாக ஒருங்கிணைவதை நாம் அலட்சியப்படுத்தப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

காணி விடுவிப்பு மற்றும் வாழ்வாதார விடயங்களில் கணிசமான முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதுள்ளன என கூறிய அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் இன்னும் முன்னேற்றம் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகமும் இழப்பேடுகளை வழங்கும் அலுவலகமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல தேசிய இனப்பிரச்சினைக்கு எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சம்பந்தன், இந்த விடயம் தொடர்பாக நாம் கரிசனையுடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பகிரவும்...