Main Menu

“தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலை”

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது என இனப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலின் 12ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா நிலைமைகளுக்குப் பின்னர் அதனையொரு காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து இலங்கை அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள தற்போதைய நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துவதாகவும் ஜனநாயகத்துக்கான இடைவெளி சுருங்கி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ( நன்றி கேசரி)

பகிரவும்...