Main Menu

ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிவசேனா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒப்பிட்டுள்ள சிவசேனா, டொனால்ட் ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், அமெரிக்காவுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லாத ட்ரம்பை கடந்த தேர்தலில் தேர்ந்தெடுத்த அந்த நாட்டு மக்கள் இப்போது அந்த தவறை திருத்திக்கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகார மாற்றம் நடந்துள்ள நிலையில், பீகாரில் அது விரைவில் நடக்கும் என்றும் கூறியுள்ள சாம்னா, தங்களை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை என மாயத் தோற்றம் காட்டும் தலைவர்களை இந்திய மக்கள் அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

பகிரவும்...