Main Menu

ட்ரம்பினை சந்தித்த நபரிற்கு கொரோனா வைரஸ்!

ஐந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதியுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

அவர் டிரம்புடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...