Main Menu

டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், டென்மார்க்கில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார்.

டேனிஷ் மற்றும் சுவீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன், ஏற்கனவே ஜனவரி 21ஆம் திகதி ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு போராட்டத்தை நடத்தி துருக்கி அரசாங்கத்தை கோபப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் ஒரு மசூதியின் முன்பும், கோபன்ஹேகனில் உள்ள துருக்கிய தூதரகத்தின் முன்பும் முஸ்லிம்களின் புனித நூலான குர்ரானை எரித்தார்.

மேலும், சுவீடன் நேட்டோவில் அனுமதிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடருவதாக உறுதியளித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து டென்மார்க் தூதர் துருக்கிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

அங்கு துருக்கிய அதிகாரிகள் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை வன்மையாகக் கண்டித்துள்ளனர், இது ஒரு வெறுப்புக் குற்றத்தை தெளிவாகக் கொண்டுள்ளது’ என கூறினர்.

தூதரிடம், டென்மார்க்கின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அனுமதி ரத்து செய்யப்படும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது என்றும் கூறப்பட்டது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் பின்னர் பலுடானை இஸ்லாத்தை வெறுப்பவர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அவர் ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு சுவீடன், ஃபின்லாந்துடன் சேர்ந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது, ஆனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் துருக்கி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், சமீபத்திய எதிர்ப்புகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

அதற்கு முன்பே, குர்திஷ் ஆயுதக் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்று கருதும் பிற குழுக்களை ஒடுக்க இரு நாடுகளுக்கும் துருக்கி அழுத்தம் கொடுத்தது.

பகிரவும்...