Main Menu

ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை!

ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது.

அங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து பழங்கால ஆபரணங்கள் அடங்கிய நகைப்பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றனர்.

அந்த நகைப்பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், இரத்தினங்கள் உட்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியிருப்பதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிரவும்...