Main Menu

ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மனியின் பிரபல லுஃப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராங்பேர்ட் விமான நிலையத்தில் மாத்திரம் 400 விமானங்களை லுஃப்தான்ஸா ரத்துச் செய்துள்ளது.

மியூனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லுஃப்தான்ஸா நிறுவனத்தால் ரத்துச் செய்யப்பட்டன.

இதன்காரணமாக லுஃப்தான்ஸா நிறுவன விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...