Main Menu

ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கின்றது: ஜோ பைடன்!

ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமளிக்கின்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 காலநிலை மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்துக் கொண்டனர்.

ஆனால், சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் இதுகுறித்து பைடன் கூறுகையில், ‘உச்சி மாநாட்டின் காலநிலை தொடர்பாக பல நாடுகளின் வாக்குறுதிகள் குறைவானவை என்று சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதற்கு ரஷ்யாவும் சீனாவும் மாநாட்டில் நேரடியாக பங்கேற்காதது முக்கிய காரணம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது.

ரஷ்யாவும் சீனாவும் அடிப்படையில் காலநிலை மாற்றத்தை கையாள்வதில் எந்த உறுதிப்பாட்டையும் காட்டவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் நாங்கள் என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் உள்ளது.

நிலக்கரிக்கான மானியத்தை முடிவுக்குக் கொண்டுவர பல விஷயங்களை இங்கே பேசி, நிறைவேற்றியுள்ளோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதற்கான உறுதிமொழி எடுத்தோம்.

குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும், ஆனால் சீனா என்ன செய்யவில்லை, ரஷ்யா என்ன செய்யவில்லை மற்றும் சவுதி அரேபியா என்ன செய்யவில்லை என்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அதுவும் தேவையானது தான்’ என கூறினார்.

பகிரவும்...