Main Menu

ஜப்பான் தலைநகரில் கடும் நிலநடுக்கம் -சுனாமி பீதியில் மக்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவிற்கு கிழக்கே, சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பதால், சுனாமி ஏற்படலாம் என மக்களிடையே அச்சம் எழுந்தது. ஆனால், சுனாமி ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டதால் சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பகிரவும்...