Main Menu

ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சி முறைப்பாடு!

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக பரிசீலனைகளை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மக்களின் பணத்தை முறைக்கேடாகப் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்குமாறு குறித்த கட்சி கோரியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மயாந்த திசாநாயக்க, நளின்பண்டார, ஜே.சீ.அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளனர்.

மேலும், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நாட்டின் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.