Main Menu

சட்டவிரோத குடிவரவு – எல்லைகளில் பாதுகாப்பு

பிரான்சில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதை அடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று வியாழக்கிழமை, ஸ்பெயின் எல்லைப்புற நகரமான Perthus (Pyrénées-Orientales) நகருக்கு பயணித்த மக்ரோன் அங்கு அதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார். அதன் போது உள்துறை அமைச்சர் Gérald Darmanin உம் உடனிருந்தார். பயங்கரவாத்துக்கு அடிப்படையான காரணத்தை நாம் கண்டறிந்துள்ளோம் எனவும், சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்க்க எல்லை கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் படியும் மக்ரோன் அறிவுறுத்தியுள்ளார்.  தற்போது 2,400 அதிகாரிகள் (இராணுவத்தினர், காவல்துறையினர், CRS அதிகாரிகள் ) கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை விரைவில் 4,800 ஆக அதிகரிக்கவும் மக்ரோன் உறுதியளித்தார்.  <<நாட்டுக்குள் நுழையும் வீதிகளோடு பொதுவான எல்லைகளையும் கண்காணிக்க வேண்டும்>> என மக்ரோன் வலியுறுத்தினார். தவிர, கடந்த 3 வருடங்களில் 32 பயங்கரவாத தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

பகிரவும்...