Main Menu

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை

எனதும் உங்களதும் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது´ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார்.

இந்த விஷேட உரை தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படுகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் பொது மக்கள் மிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை தடைச்செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிப் பெற்றதை போன்று இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பருப்பு ஒரு கிலோ கிராமிற்கான அதிகப்பட்ச சில்லறை விலை 65 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், டின் மீன் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 100 ரூபா என நிர்ணயிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நிலையான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடனை ஆறு மாதங்களுக்கு அறவிட வேண்டாமென உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...