Main Menu

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் மூடல்

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.

பகிரவும்...