Main Menu

சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலத்தில் கொரோனா வைரஸ்? வடகொரியா அச்சம்!

சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என வட கொரியா அஞ்சுகிறது.

இதனால், தங்கள் நாட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

பருவம்தோறும் வீசும் இந்த தூசு படலத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது. ஆனால், தூசு படலத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருப்பதாக வட கொரியா மட்டுமே கருதவில்லை.

வைரஸ் கலந்த தூசு படலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே தங்கள் நாட்டு மக்களை முகக் கவசம் அணியும்படி வலியுறுத்துவதாக துர்க்மெனிஸ்தான் கூட கூறுகிறது.

வெளி உலகத்துடன் பெரிதும் தொடர்பற்று வாழும் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸே இல்லை என்று கூறிவந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே எல்லைகளை கண்டிப்புடன் மூடிவைத்துள்ளதோடு, நடமாட்டத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது.

வட கொரியா தன்னிடம் பூஜ்ஜிய வைரஸ் தொற்றுகள் இருப்பதாகக் கருதுகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள்.

பகிரவும்...