Main Menu

சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க!

இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின்போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே மாலிங்கவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக 84 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க அதில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மாலிங்க ஆவார்.

இருபதுக்கு இருபது போட்டியில் இரு முறை ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.

லசித் மாலிங்கவுடன் டெல் ஸ்டைன் (தென்னாபிரிக்கா), வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்ரேலியா), மொஹமட் அமீர் (பாகிஸ்தான்), ட்வேன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), ஜஸ்பிரித் பூம்ராஹ் (இந்தியா) ஆகிய வீரர்கள் குறித்தும் ஆராயப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

பகிரவும்...